சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின்னர், இசையருவி, சன் மியூசிக் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்தார். மகேஸ்வரிக்கு இதற்கிடையில் திருமணமானது.
எனவே, குழந்தை, குடும்பம் என்று பிசியாகிவிட்டார். சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் தன்னுடைய கெரியரை தொடங்கியுள்ளார். புதுக்கவிதை, தாயுமானவன் போன்ற ஒரு சில சீரியல்களில் அவர் நடித்தார்.
மேலும், மந்திரப்புன்னகை, குயில், சென்னை 28 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த அவர் பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மீண்டும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உடன் இணைந்து நடித்த மகேஸ்வரி இந்த படத்தின் மூலமாக காஸ்ட்யூம் டிசைனராக அவதாரம் எடுத்தார்.
View this post on Instagram
சமீபகாலமாக இணையதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படம் போடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், தற்பொழுது தன்னுடைய முன்னழகை காட்டியபடி ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.