விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில், நடிகை வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி இருப்பதால், முதல் சீசன் முடிந்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் கடந்த நவம்பர் 14-ம் தேதி துவங்கியது.
இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், நடிகை சகிலா, மதுரைமுத்து, தர்ஷா குப்தா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, தீபா மற்றும் கனி ஆகியோர் சமயலர்களாக பங்கேற்று இருக்கின்றனர். இதில், கோமாளிகளாக சிவாங்கி, புகழ், மணிமேகலை, விஜே பார்வதி, டிக் டாக் சரத் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதில், மாடல் நடிகையான பவித்ரா லக்ஷ்மி கலந்து கொண்டு இருக்கின்றார்.
இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பெரும் வைரல்.
View this post on Instagram