பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு….

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பிரேசில். பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கையில் 2ஆம் இடம் வகிக்கிறது. அந்த அளவுக்கு பிரேசிலில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் மேலும் 2198 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 74,845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 6.26 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 கோடி பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.