பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மகாபாரத கதையையும் மலையாளத்தில் படமாக்க உள்ளனர். தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற பெயரில் படமாகிறது.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். சீதையாக நடிக்க கீர்த்தி சனோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரூ.500 கோடி செலவில் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியிலும் ராமாயண கதை சீதா என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் சீதா என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் சீதையாக நடிக்க கரீனா கபூர், அலியாபட் ஆகியோர் பரிசீலிக்கப்படுவதாகவும் கரீனா கபூருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. ராவணன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருகிறார்கள். அவருக்கு கதை பிடித்துள்ளதால் ராவணனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அலாவ்கிக் தேசாய் இயக்குகிறார்.