தந்தை இறந்ததற்கு காரணம் நீங்களே… பெண் மருத்துவரை தாக்கிய மகன்!

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தந்தை இறந்ததால், மகன் ஆவேசத்தில் பெண் மருத்துவரை தாக்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில், அவரது மகன் திப்பேசாமி என்பவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் பிரியதர்ஷினியிடம், நீங்கள் தந்தைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

முதியவரின் மகனை சமாதானப்படுத்த மருத்துவர் பேசியக்கொண்டிருந்த போது ஆவேசத்தில் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு, குறித்த நபர் எஸ்கேப் ஆகியுள்ளார்.

இக்காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையையடுத்து, நபரைக் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.