ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 285 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.3 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 284 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 243 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.