யாழ்.காரைநகரின் ஒரு பகுதியை முடக்க திட்டம்..! தேசிய கொவிட் செயலணியிடம் கோரிக்கை
சமர்ப்பிப்பு, 60 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..
யாழ்.காரைநகரின் ஒரு பகுதியில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட
நிலையில் குறித்த பகுதியினை முடக்கும் கோரிக்கு தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு
அனுப்பபட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செயலர் க.மகேஸன் கூறுகையில், காரைநகர் ஜே-47 கிராமசேவகர்
பிரிவில் ஒரு பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதனபடிப்படையில் அந்த பகுதியை முடக்குவதற்கான கோரிக்கை மாவட்டச் செயலகம் ஊடாக தேசிய
கொவிட் தடுப்பு செயலணிக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் கூறியிருக்கும் மாவட்ட செயலர்,
தற்சமயம் 60 குடும்பங்கள் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு
தேவையான நிவாரணத்தை வழங்க தயாராகி வருவதாகவும் கூறியிருக்கின்றார்.