நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார். அவர் நடிப்பில் குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
இதற்கிடையில் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார். முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றி பெற்றது.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லஷ்மி மேனன், அவ்வெப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு ரசிகர்களுடனும் பேசி வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், ஆமாம் என்று கூறினார். அதேபோன்று மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து யார் அந்த காதலர் என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.