யாழ் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளார். சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இளைஞனை வழிமறித்த சிலர் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர்.
சம்பவத்தை அடுத்து இளைஞன் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
கையில் காயம் அடைந்த அவர் தற்போது சாவச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மணல் ஏற்றும் விவகாரமே வாள் வெட்டில் முடிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.