வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை சிறுவர்கள் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவின் ஷம்ஷாபாத் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் தனது 13 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு, உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட வீட்டின் அருகே இருந்த 13 வயது சிறுவனும், 22 வயது இளைஞரும் தெரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து குளோப்ஜாமூன் சாப்பிடுவதற்கு வெளியே அழைத்து வந்துள்ளனர்.
தனிமையான இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற இவர்கள், சிறுமிக்கு குளோப்ஜாமுன் கொடுத்த நிலையில் சிறுமியும் அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்பு இருவரும் சேர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர். இதனை சிறுமி சகோதரரிடம் கூறவே, வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தங்கையை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்ததைக் கூறி புகார் அளித்ததின் பெயரில், குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் குறித்த 13 வயது சிறுவனை சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கும், 22 வயதான வாலிபரை சிறையிலும் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.