யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் கொரோனாவால் இரு பெண்கள் பலி!

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்கோப்பாய் பகுதியை சேர்ந்த 87 வயதான வயோதிப பெண் ஒருவரும், கொக்குவில் – மஞ்சவனப்பதி பகுதியை சேர்ந்த 95 வயதான பெண் ஒருவரும்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.