தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
இந்நிலையில், நடிகர் சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் டுவிட்டரில் நடிகர் சிம்புவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தில் இடம்பெறும் ‘மாங்கல்யம்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.