போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பாகவே தங்களுக்கு தேவையான அனைத்து மது பானங்களையும் மக்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அருகே வசிப்பவர் சங்கர். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த மூன்று நாட்களாகவே போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்துள்ளார்.
நேற்று தனது இரண்டு நண்பர்களையும் அழைத்து அதேபோன்று, குடித்துக் கொண்டிருக்கும் போது சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.