பொதுவாக சக்கரையில் இரண்டு வகையுடன் அதில் நாட்டுச்சக்கரையே நல்லது என்று நமது முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனெனில் வெள்ளை சக்கரையில் இனிப்பு சுவை மட்டுமே இருக்கும், அவற்றில் வேற எந்த ஒரு நல்ல ஊட்டச்சத்து எதுவும் இல்லை.
அது மட்டும் இல்லாமல் நாம் வெள்ளை சக்கரையை அதிகம் உணவு பொருட்களில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு அதிகம் கேடுகளை விளைவிக்கிறது. மேலும் நம் உடலுக்கு பல வகையான நோய்களை உருவாக்கி நம்மை மரணத்தில் தள்ள அனைத்து வகையிலும் பாடுப்படுகிறது.
எனவே உடலுக்கு கேடை விளைவிக்கும் இந்த வெள்ளை சக்கரை பயன்படுத்துவதற்கு பதில், நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் நாட்டு சர்க்கரையை இனியாவது பயன்படுத்தலாம்.
அந்தவகையில் நாட்டு சர்க்கரையை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
மாதவிடாய் வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும். மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும்.
நாட்டு சர்க்கரையில் இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறையும். உடல் எடையும் குறைய அதிகம் உதவும்.
நாட்டு சர்க்கரை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும். மேலும், உடலுக்கு அதிக வலிமையையும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் குடிக்கும் டீ, காபியிலும் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். நாட்டு சர்க்கரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள்.
சிலர் எப்போதுமே சோர்வாகக் காணப்படுவார்கள். அத்தகைய பிரச்சினை இருக்கிறவர்கள் வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். இது உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.
சளி, இரும்மல், ஜலதோஷம் போன்றவற்றை உடனடியாகவே குணமாக்கும். சிறிது ஓமத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் கோழை சளி வெளியேறும்.
நாட்டுச் சக்கரையில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் முக அழகிற்குப் பெரிதும் உதவுகிறது. சிறிது வாழைப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து முகத்துக்கு அப்ளை செய்ய சருமம் பொலிவாகும். சரும செல்கள் சிதைவடைவதில் இருந்து காக்கும்.