அந்த நடிகரை வெறுத்து ஒதுக்கும் பிரியா பவானி சங்கர்.! வெளியான காரணம்!

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கி, தற்போது இந்த வருடத்தில் கோலிவுட்டின் பிசியான நடிகைகளின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றார். சமீபத்தில் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

சிம்பு மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் அவர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். 4 படங்கள் இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், புதிதாக இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கின்றார்.

பத்து தல படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலில் நடித்து, அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் நாயகியான பின்பு மீண்டும் சின்னத்திரை எல்லாம் நமக்கு செட்டாகாது என்று தற்போது கூறுகிறாராம்.

மேலும், அவர் தற்போதெல்லாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொஞ்சம் கிளாமர் காட்ட துவங்கி இருக்கிறார். இதற்கு காரணம் தான் கவர்ச்சிக்கு ரெடி என்று மறைமுகமாக உணர்த்துவதே ஆகும். எனவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த செய்தி குறித்து உண்மை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விஷாலுடன் படம் நடிக்க வேண்டாம் என்று பிரியா பவானி சங்கர் முடிவெடுத்துள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு காரணம், விஷாலுடன் சேர்ந்து படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுவதாக கிசுகிசுக்கள் உலவுவதால் இந்த சிக்கலில் சிக்க வேண்டாம் என்று பிரியா பவானி சங்கர் யோசித்து வருவதாக தெரிகிறது.