ஈரானை விடாத கொரோனா – 80 ஆயிரத்தை நெருங்கும் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 10,253 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.86 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 184 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 24.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.