நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:-
நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போலீசில் புகார் கொடுக்கப்போவதாக என்னிடம் போனில் மிரட்டினார்கள்.
புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி வேண்டும் என்றனர். நான் செய்யாத தவறுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்றேன். முதலில் ரூ.3 கோடி கேட்டவர்கள் பின்னர் படிப்படியாக இறங்கி ரூ.50 லட்சம் கடைசியாக கேட்டனர். நான் தர முடியாது என்று கூறி விட்டேன்.
பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை பயன்படுத்தி உள்ளனர். பொய்யான இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன். எனது மனைவியுடனும் இது பற்றி போனில் பேசி மிரட்டி உள்ளனர்.