மிளகாய் துாளை கண்ணில் துாவிய கோப்பாய் பொலிஸார்… முக்கிய தகவல்!

யாழ்.கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தம்மை கட்டி வைத்து மிக கொடூரமாக தாக்கியதாக அக்காவும், தம்பியும் சகோதரர்கள் இவ்வாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 21ம் திகதி திருட்டு சம்பவம் ஒன்றின் சந்தேகநபரான புத்துார் பகுதியை சேர்ந்த ஒருவர் இருபாலை பகுதியில் உள்ள அவருடைய சகோதரி வீட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறி பொலிஸார் சகோதரி வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது அங்கே இல்லை என கூறிவிட்டு திரும்பிய பொலிஸார் , அன்றைய தினமே நள்ளிரவில் வீட்டக்குள் கம்பிகள், தடிகளுடன் நுழைந்து ர் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் சந்தேநபரை வீட்டார் தேடி பிடித்து கடந்த 23ம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்றபோது அவரை செம்மணி பகுதிக்கு கொண்டுவருமாறு கூறிய பொலிஸார் செம்மணி பகுதியில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் , 23ம் திகதி மீண்டும் சந்தேகநபரின் சகோதரி வீட்டுக்கு சென்ற பொலிஸார் அவர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறி கைது செய்ததுடன் 2 நாட்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மிளகாய் துாளை கண்ணில் துாவி இரு பெண் பொலிஸார் பிடித்திருக்க ஆண் பொலிஸார் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.