ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் பலமனேர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 45). இவரது மகள் சைலஜா. இவரும், தனசேகர் என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
தனசேகர் பெங்களூரில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக தனது சொந்த கிராமத்தில் இருந்து வந்துள்ளார். இதன்போது, காதலையும் வளர்ந்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் சைலஜாவின் தந்தை பாபுவுக்கு தெரியவந்துள்ளது.
இந்த காதலுக்கு பாபு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சைலஜா காதலில் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனசேகர் தனது காதலியை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில், காதலியின் அறையில் அவரின் குடும்பத்தினருக்கு தெரியாமல் பதுங்கி இருந்துள்ளார்.
மகளின் செயல்பாடுகளை கண்டு சந்தேகமடைந்த தந்தை, அவரது அறையில் நடத்திய சோதனையில் தனசேகர் வீட்டிற்குள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாபு தனசேகரை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
தனசேகரின் உடல் கிடைக்கக்கூடாது என்பதால் உடலை துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்திலேயே பாபு புதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனசேகர் சனிக்கிழமை மாயமானது தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் மேற்கூறிய பகீர் தகவல் தெரியவந்துள்ளது.