மட்டக்களப்பு – வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவான மருதநகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் இதை தெரிவித்தார்.
மேற்படி கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் தொடர்புபட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனால் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் அப் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் காலை, மாலை வேளைகளில் கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஒலி பெருக்கி மூலம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 43 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் 20 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி அடிக்கடி பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.