திரைத்துறை நடிகைகள் மற்றும் படவாய்ப்பு தேடிவரும் இளம்பெண்கள், மாடல் அழகிகள் ஆகியோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், அவர்களை பலவந்தமாக படுக்கைகைக்கு அழைக்கும் கலாச்சாரம் இன்றளவும் திரைமறைவில் நடந்து வருகிறது.
மஹாராஷ்ட்ராவை பொறுத்த வரையில் அது மிகப்பெரிய திரைஉலகமாக இருக்கும் நிலையில், அவ்வப்போது திரைத்துறை நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் பாலியல் ரீதியான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் 28 வயதாகும் மாடல் அழகி, புகைப்பட கலைஞர் மற்றும் 8 பேர் மீது பரபரப்பு பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். மேலும், அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான புகாரை ஏற்றுக்கொண்ட பந்த்ரா காவல் துறையினர், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.