38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும், 20 வயதான இளைஞனிற்கும் ஏற்பட்ட காதலால், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
காதலர்கள் இருவரும், லொக் டவுனையும் பொருட்படுத்தாமல், செல்வச்சந்நிதி ஆலய சூழலில் லொள்ளுவிட வந்த சமயத்தில், உறவினர்களால் சுற்றிவளைக்கப்பட்டதில் களேபரம் ஏற்பட்டது.
இறுதியில் வல்வெட்டித்துறை பொலிசாரே தலையிடும் அளவிற்கு, அந்த ஜோடி காதலில் உறுதியாக இருந்துள்ளது. காதல் ராணி வடமராட்சி துன்னாலையை சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகளின் தாய். அவரது கணவர் மேசன் தொழில் செய்து வருகிறார். மேசன் வேலையாக கொற்றாவத்தை, சமரபாகுவிற்கு சென்று தங்கியுள்ளார்.
சில நாட்கள் அங்கு தங்கியிருந்த போது, தனது மனைவியுடன் இரவில் உரையாடுவதற்கு, தன்னுடன் தொழில்புரிந்த 20 வயதான இளைஞன் ஒருவனின் தொலைபேசியை பாவித்துள்ளார். சில முறை மனைவியுடன் உரையாடிய அந்த அப்பாவி கணவன், அதன் பின் நடக்கவிருந்த விபரீதத்தை உணரவில்லை.
தொலைபேசிக்கு சொந்தக்காரனான 20 வயது இளைஞனும், மேசன் தொழிலாளியின் 38 வயது மனைவிக்குமிடையில் தொலைபேசி அறிமுகம் ஏற்பட்டு, அது காதலாக உருவாகியது. கணவன் தன்னுடன் தங்கியிருந்த போதே, அவருக்கு தெரியாமல் மனைவியுடன் சமரபாகு இளைஞன் சரசம் பொழிந்துள்ளார்.
அந்த காதல் முற்றி சில நாட்களின் முன்னர் இருவரும் ஓடிப் போயுள்ளனர். இரண்டு தரப்பிலும் காதலர்களை வலைவீசி தேடியுள்ளனர.
காதலன் தரப்பு உறவினர்கள் அவருடன் பேசி, அவருடன் சந்திப்பற்கு முயற்சித்துள்ளனர். இதன்படி, நேற்று (29) செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு காலை 10 மணிக்கு வருமாறு காதலன் கூறியிருக்கிறார்.
அவரை தம்முடன் கொண்டு செல்வதே உறவினர்களின் திட்டம். நேற்று காலையிலேயே சமரபாகு இளைஞர்கள் பலர் சிறு குழுக்களாக செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மறைந்திருந்தனர். எனினும், காதல் ஜோடி வரவில்லை.
அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெரும் இழுபறியின் பின் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் காதலர்கள் இருவரும் வந்துள்ளனர்.
ஆலயத்திற்கு வந்த அவர்களை சமரபாகு இளைஞர்கள் வளைக்க, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு- காதல் ராணியையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு இளைஞன் தப்பியோடினார்.
எனினும், அவரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். அவரை கோயிலடியில் வைத்தே காதல் பித்து தீரும் வரை உறவினர்கள் நையப்புடைத்துள்ளனர்.
இதை பார்த்து பொறுக்க முடியாத காதலி, “வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன். அவரை அடிக்காதீர்கள். அவர் மேல் ஒரு துரும்பு பட்டாலும், என்னையும் அவரையும் பிரிக்க முயற்சித்தாலும் கடலில் விழுந்து சாகப் போகிறேன்“ என மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனினும், அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு புத்திமதி கூறி, இது காதல் இல்லை, கண்றாவியென்பதை புரிய வைக்க முயன்றனர். எனினும், 20 வயது காதலனுடனேயே வாழப்போகிறேன், கணவனுடன் வாழப்பிடிக்கவில்லையென அவர் கூறிவிட்டார். இதையடுத்து, பெண்ணின் மூத்த சகோதரனிற்கும் தகவல் லழங்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு வந்த போது, அவருடன் செல்வதற்கு காதல் ராணி மறுத்து விட்டார். 20 வயது காதலனுடன்தான் செல்வேன் என அடம்பிடித்துள்ளார்.
இந்த கண்றாவியை காண சகிக்காத சகோதரன், தான் கொண்டு வந்த தலைக்கவசத்தாலேயே தனது சகோதரியை கடுமையாக தாக்கி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.
இந்த களேபரம் வல்வெட்டித்துறை பொலிசாருக்கும் அறிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், காதலனை தம்முடன் அழைத்து சென்று, புத்திமதி கூறி, லொக் டவுனில் லொள்ளுவிட்டு திரியாமல் வீட்டிலிருக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.