இயக்குனர் ரத்னகுமார் வீட்டில் ஏற்பட்ட சோகம்!

மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார்.

இப்படத்தை தொடர்ந்து அமலா பாலுடன் இணைந்து ஆடை எனும் படத்தை கொடுத்தார்.

இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்திலும் எழுத்தாளராக பணிபுரிந்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் ” 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா.

அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு ” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.