விஜயகாந்த் பாட்டுக்கு மகனின் அசத்தல் நடிப்பு…என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த பல ஆண்டுகளாக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

சமீப காலமாக, அவரது உடல்நலம் குன்றியிருந்த நிலையில், அதிலிருந்து அவர் மெல்ல மெல்ல உடல்நலமும் தேறி வருகிறார். .

இதனிடையே, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றிருந்த சட்டமன்ற தேர்தலில், தன்னால் அதிகம் பிரச்சாரம் செய்ய முடியாத காரணத்தினால், அவருக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், அரசியல் களத்தில் அதிகம் பயணம் மேற்கொண்ட விஜய பிரபாகரன், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது தந்தை விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தந்தன தந்தன’ என்ற பாடலுக்கான ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் கேப்சனில், ‘எப்போதும் தந்தையின் பாடலுக்கு எப்போதும் வீடியோவை செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.