சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத பலவற்றில் இளம் பெண்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக மொடலிங் எனும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் அதிக பெண்களை இழுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கணிசமான அளவு பெண்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாய்பினை பெற்றுக்கொள்ள தம்மையே அடமானம் வைக்கும் இழிவான நிலைக்கும் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய சினிமாத்துறையில் இது சாதாரண விடயம் என்ற போதிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான சமூக மாற்றம் பெரும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுவொரு பாலியல் சார்ந்த கலாச்சாரத்திற்குள் பெண்கள் தள்ளப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கலாச்சாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணத்தில் தற்போது இளம் தலைமுறையினரின் செயற்பாடு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. மொடலிங், பாலியல், போதைப்பொருள் என இளைஞர்கள் பாதை திசை மாறிச் செல்வதாக பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். யாழ் மண்ணில் மொடலிங் அறிமுகமாகி 5, 6 வருடங்கள் தானாகின்றது.
ஆனாலும் பாதி இளஞ்சந்ததியினரின் வாழ்க்கையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழிவுப்பாதையில் திசை திருப்பும் களமாக அது மாறிவிட்டது. அது மட்டுமில்லாமல் எமது தம்பி, தங்கையரின் எதிர்காலம் அவர்கள் பெற்றோரின் கனவுகள் அனைத்துமே சிதைக்கப்படுவது உறுதி.
தமிழ், கலாச்சாரம், நிலம் என 30 ஆண்டுகளாக வீட்டுக்கு ஒருவர் என 3 இலட்சம் பேரை பறிகொடுத்து விட்டு, இரத்தம் சிதறிய சூடு மண்ணில் இன்னும் ஆறவில்லை. அதற்குள் இவ்வாறான சமூக மாற்றங்கள் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.