யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி உயிரிழப்பு

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போதைக்கு அடிமையாகியிருந்த குறித்த நபர், கொரோனா சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அவர் தப்பியோடினார்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட சுகாதார, பாதுகாப்பு தரப்பினர் அன்றைய தினமே அவரை பிடித்து கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற போது, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிற்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி குறித்த நபர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.