ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிய அரசுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது.
இந்த கடுமையான போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்காவும் உதவி செய்து வரும் நிலையில், நோட்டா படையும் களமிறக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தலிபான பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பீரங்கி மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பரிதாபமாக பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் இருக்கும் காபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பீரங்கி தாக்குதல் திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டில் விழவே, 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 7 பேரில் 4 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்த 4 பேரை மீது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.