நாட்டின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைக்கப்பட உள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத் தடை உத்தரவினை உரிய முறையில் அமுல்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி வரையில் அனைத்து வகையான அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் சீல் வைக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.