சீன இறையாண்மையில் ஆஸி., தலையிட வேண்டாம்….

சீனா – ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் முந்தைய காலங்களில் இல்லாத அளவு மோசமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சீனாவிற்கு எதிரான கருத்துக்களை, ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவுடன் இணைந்து வரவேற்றது. மேலும், சீனா தான் கொரோனா வைரஸை உலகத்திற்கு பரப்பியது என்று ஆஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது.

இதனால் சீனா – ஆஸ்திரேலியா இடையேயான உறவுகள் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் உருவாக்கப்பட இருந்த சீன – ஆஸ்திரேலிய கூட்டமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ” சீனாவின் நீதித்துறை அதிகாரிகள் சீன – ஆஸ்திரேலிய யாங் ஜுன் அல்லது யாங் ஹெங்ஜுன் வழக்கை சட்டத்தின் படி கையாண்டனர். அவர்களின் சட்ட உரிமைகளை முழுமையாக பாதுகாத்தனர்.

சீனாவின் சட்ட விதிகள் குறித்து விரல் காட்டுவதை நிறுத்துமாறு நாங்கள் ஆஸ்திரேலியாவை கேட்டுக்கொள்கிறோம். நியாயமற்ற முறையிலான புகார்களை தெரிவித்து ஆத்திரமூட்டல்களை ஏற்படுத்த வேண்டாம் மற்றும் சீனாவின் நீதித்துறை இறையாண்மையில் ஆஸ்திரேலியா தலையிட வேண்டாம் ” என்று தெரிவித்துள்ளார்.