தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சகோதரியை காப்பாற்ற சென்ற சகோதரனும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரைச் சேர்ந்தவர்கள் தவுலத் பாட்ஷா, ஹாகின் தம்பதி. இவர்களது மகன் ஹர்ஷியா ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் ஹாகினின் தங்கை ரேஷ்மா(26), அவரது தம்பி சார்யா அஹமத்(25) ஆகிய இருவரும் சமீபத்தில் வெள்ளாங்குளிக்கு அவர்களை பார்க்க வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அனைவரும் குடும்பத்தினருடன் முக்கூடல் அடுத்த திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரேஷ்மா தண்ணீரில் மூழகியுள்ளார். உடனே தனது சகோதரியை மீட்கச் சென்ற சகோதரர் சார்யா அஹமத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து பொதுமக்களின் உதவியுடன் ரேஷ்மா, சார்யா அஹமத் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.