கருவில் இருந்த சிசு கொரோனாவால் மரணம்… வெளியான முக்கிய தகவல்!

கர்ப்பிணிப் பெண் ஒருவரது கருவிலேயே உயிரிழந்த 09 மாத சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

காலி – மஹமோதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 09 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருந்த சிசு திடீரென உயிரிழந்துள்ளது.

குறித்த தாய்க்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பூரண குணடைந்ததன் பின்னர் வீடு திரும்பியிருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சிசு உயிரிழந்துள்ளதுடன் சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது.