மருத்துவரை சரமாரியாக அடித்து ஆடையை கிழத்து ஓட விட்ட உயிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர்!

இந்தியாவில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை சரமாரியாக அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் Hojai மாவட்டத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து தாக்குலுக்குள்ளான மருத்துவர் seuji குமார் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை 1.30 மணியளவில் நான் மருத்துவமனைக்கு வந்தேன்.

அப்போது நோயாளி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக குடும்பத்தினர் என்னை அழைத்து சென்றனர்.

நான் சென்று பார்த்த போது நோயாளி ஏற்கனவே இறந்துவிட்டார். இதன்பின் குடும்பத்தினர் அனைவரும் என்னை கும்பலாக தாக்கியதாக தெரிவித்துள்ளார்.