நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமான அவர், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதையடுத்து ‘யுத்ரா’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மாளவிகா மோகனன், இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதற்குமுன் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.