கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
பின்னர், வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்தவுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
Words of wisdom from Actress #AishwaryaRajesh, who appeals to one and all to stay indoors during this pandemic!@aishu_dil @CMOTamilnadu @chennaicorp #COVIDSecondWave pic.twitter.com/NRVxztAF0F
— Yuvraaj (@proyuvraaj) May 31, 2021
பிணத்தை எரிக்கவோ மருத்துவமனைகளில் படுக்கைக்கோ இடம் கிடைக்காமல் மக்கள் அன்றாடம் அல்லாடி வரும் செய்திகளை காணமுடிகிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது விதி முறைகளை கடைப்பிடிப்பது என்று முயற்சித்து வருகின்றனர்.
இத்தகைய நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.