மசூதியில் வைத்து 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. வெளியான தகவல்!

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பான பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான குற்றத்தில் ஈடுபடும் காமுகன்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியை சார்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள மசூதி அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுமியின் தந்தை மசூதிக்குள் இருந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், மசூதியில் இருந்த மவுலானா முகம்மது என்பவன், சிறுமியை மசூதிக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கவே, சிறுமி வயிற்று வலி பொறுக்க இயலாது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மசூதிக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மவுலானா முகம்மது என்ற 47 வயது நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

மேலும், ட்விட்டர் தளத்தில் ஒரு ஹாஷ்டேக்கும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டும். அந்த தவறுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், இதற்கும் தெரிவித்தால் அது மட்டும் தான் நடுநிலை என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.