எனக்கு கவலையில்லை.. ரைசா…

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர்.

இதனால் கோபமான ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் கொண்டவர் என்று அர்த்தம். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். எனக்கு விருப்பமானதை உடுத்துவதாகவும், மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என ரைசா பதிலடி கொடுத்துள்ளார்.