ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் ன் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இது இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவிருப்பதாகவும் முன்பதிவு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி விற்பனை ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
அதுமட்டுமன்றி இதனுடன் ஒன்பிளஸ் டிவி U1S மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா, 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.