பெண் ஆயுதப்படை அதிகாரி மர்ம மரணம்.. கோவையில் அதிர்ச்சி..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஆயுதப்படை காவல் அதிகாரி மகாலட்சுமி. இவர் இன்று காலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார்.

பார்ப்பதற்கு தற்கொலை போல சித்தரிக்க வேண்டி, ஜன்னலில் கயிற்றினை கட்டி மகாலட்சுமியின் உடலை பாதி நிலையில் தொங்க விட்டது போல மர்மமாக அறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்த நிலையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காவல் துறையினர் வருவதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயுதப்படை காவல் அதிகாரி மகாலட்சுமியின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறி புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரை ஏற்றுக்கொண்ட பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.