இந்தியாவில் மணமகள் காலில் விழுந்த, மணமகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை அந்த மாப்பிள்ளையே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களில், மணப்பெண்ணின் காலில், மாப்பிள்ளை விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஒரு சிலர் இந்த புகைப்படத்தைக் கண்டு கிண்டல் செய்தனர். ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி செய்தார்? யார் இவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். அதற்கு எல்லாம் விடை கிடைக்கும் வகையில், அந்த மாப்பிள்ளை பதில் அளித்துள்ளார்.
வடமாநிலத்தை சேர்ந்த மருத்துவர் அஜித் வர்வந்த்கார், இவர் தான் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது, அவர் தன்னுடைய மனைவியின் காலில் விழுந்தார்.
உடனே மணப்பெண்ணும், நல்லா இருங்க என்று ஆசீர்வாதம் வழங்கினார். இதைக் கண்ட இரு வீட்டாரும் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருமே, சற்று அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்தனர்.
ஆனால், அது ஏன் என்பது குறித்து கூறாமல் இருந்த நிலையில், அவர் தற்போது அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதில், என் வீட்டிற்குச் செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போகிறவள் என் மனைவி. அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை. என் குழந்தையைப் பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தைத் தொட்டுத் திரும்பப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
எனக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போகிறவள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
அவளின் அன்புக்கு உரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் என் மனைவி பயணிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
எனது பரம்பரையைப் புதிதாக உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.
இப்படி, எனக்காக இத்தனை செய்யப் போகும் என் மனைவிக்கு, நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.