கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழில் கடுகு, கோலிசோடா 2, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்த நடிகை சுபிக்ஷா கொரோனாவால், உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.
பொது மக்களுக்கு உணவுகள், கால்நடைகளுக்கு பழங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு நேரில் சென்று கொடுத்து வருகிறார். தற்போது சுபிக்ஷா நடிப்பில் கன்னித்தீவு திரைப்படம் உருவாகி உள்ளது.
View this post on Instagram