‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடிப்பதால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வருகிறது.
தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார்.
தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் வரலட்சுமி. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவிஎண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார். இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Thank you so much @Udhaystalin for meeting with #saveshakthi , launching our #covid helpline and accepting our 2 ton food for the stray animals on behalf of the government.. @SBWHealth @Pedigree_India @IHROWorld plz use our COVID helpline we are here to help as much as we can.!! pic.twitter.com/731Xe7ug1A
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) June 3, 2021