காய்ச்சல் அச்சத்தால் திருமுல்லைவாயல் பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியை சார்ந்தவர் நாகேஸ்வரி. இவருக்கு வரன் பார்த்து திருமணம் முடித்து வைத்த நிலையில், திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கணவரை பிரிந்து தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 7 வருடமாக தனது தாய் மற்றும் தந்தையுடன் நாகேஸ்வரி அம்பத்தூரில் வசித்து வந்த நிலையில், மூவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடமாக கொரோனா பரவலால் அவ்வப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இதனால் மூவருக்கும் கடுமையான அளவு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரமாக வீட்டில் மூவருக்கும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், கொரோனா அச்சத்தால் மூவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.