கோயம்புத்தூர் மாவட்டம் தற்போது தமிழகத்திலேயே அதிகளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்த பாதிப்பு, கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது.
கொரோனா வைரஸின் முதல் அலையை பொறுத்த வரையில் முதியவர்கள் அதிகளவு உயிரிழந்த நிலையில், இரண்டாவது அலையில் வாலிபர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 வயது கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்ட பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து, பெண்மணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்மணிக்கு கொரோனாவுடன் நிமோனியா பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.