யாழ். அராலி தெற்கு பகுதியிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து வெடிக்காத நிலையில் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த வீட்டின் உரிமையாளர் குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது குறித்த ஷெல்கள் கிணற்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.