சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், வேறு யாரேனும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தால் 9444772222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது வெளி மாவட்டங்களில் இருந்து முன்னாள் மற்றும் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் என 35க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் மகளிர் பொலிசாரிடம் நம்ப முடியாத பல தகவல்களை கூறியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சரியாக படிக்காத சில மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தனி வகுப்பு நடத்துவதாக விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அழைத்து செல்வார் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, தான் கோவிலுக்கு சென்றதாகவும், கோவில் தீர்த்தம் என்றும் தண்ணீர் போன்று ஒன்றைக் கொடுப்பார், அதனைக் குடித்ததும் மயக்கம் ஏற்படும்.
இதுகுறித்து ஆசிரியரிடம் கூறினால் சாப்பிடாமல் வந்திருப்பாய்… ஓய்வறையில் ஓய்வு எடுத்துவிட்டு வா என்று கூறிவிடுவார்.
பின்பு தங்களுக்கு ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் உடல் மட்டும் வலிக்கும்… அதனை அறிந்த பின்பே தங்களுக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்வோம் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு, மிரட்டி தங்களை சீரழித்துள்ளார் என்று பல மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலம் அளித்த முன்னாள் மாணவிகளில் பலர் தற்போது பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் பிஎஸ்பிபி அண்ணாநகர் பள்ளியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் என்பவர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.