யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. அதன்படி கரவெட்டி – கரணவாய் பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் மண்டான் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரே தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அண்ணாசிலையடி பகுதியில் ஒருவருக்கும், சோழங்கன் பகுதியில் மூவருக்கும் நொத்தாரிசு தோட்டப் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.