மாணவிகளை ஸ்டில் எடுத்து வைத்து ஆபாசமாக ரசித்த காமுகன்..

சென்னையில் உள்ள கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியில் பயின்று வந்த மனைவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது, மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுவது என்று பல்வேறு கொடூரங்களை காமுகன் நிகழ்த்தி வந்த நிலையில், ஒரு சமயத்தில் இவனது செயல்பாடுகளளால் பாதிக்கப்பட்ட மாணவிகள், முன்னாள் மாணவிகள் ஆகியோர் இணையத்தில் இந்த தகவலை பதிவிட்டதன் அடிப்படையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகி காமுகன் கைது செய்யப்பட்டான்.

விசாரணைக்காக 3 நாள் காவலில் எடுத்த காவல் துறையினர் சும்மர் 250 கேள்விகளுக்கு ராஜகோபாலனிடம் எழுத்துப்பூர்வ பதிலை பெற முயற்சித்துள்ளனர். மேலும், விசாரணையில், ராஜகோபாலன் தனது அலைபேசி மற்றும் கணினி வழியாக மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவு செய்து, Zoom செய்து ஆபாசமாக ரசித்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு பின்னர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.