மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் நேற்று ( 04 ) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் 70 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளர்.
அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி சிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும்
வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும்
வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும்
கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும்
பொலிஸ் உத்தியோகத்தர் 03 பேரும்,
சிறைச்சாலையில் 03 பேர் உட்பட 92 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 25 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.