எனக்கு இருக்கும் ஒரே நண்பர் விஜய் தான் – நடிகர் ராகவா லாரன்ஸ்

முதன் முதலில் நடன கலைஞராக பணிபுரிந்து, அதன்பின் நடிகராக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ்.

நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் முதன் முதலில் 2004ஆம் ஆண்டு மாஸ் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

ஆனால் 2007ஆம் ஆண்டு வெளியான முனி எனும் ஒரே திரைப்படம் இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது காஞ்சனா, 1,2,3 வரை படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ” எனக்கு திரையுலகில் நண்பர்கள் பெரிதும் இல்லை. எனக்கு நண்பர் என்றால் அது விஜய் மட்டும் தான் ” என்று கூறியுள்ளார்.