ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோகிபாபு நடித்த ‘சண்டிமுனி’ எனும் பேய் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திலும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபுவின் தோற்றத்துடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.